இன்று மாலை வெளியாகிறது 'வலிமை' மேக்கிங் வீடியோ: ரசிகர்கள் உற்சாகம்
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது .
சென்னை,
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.,வலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகிறது . சமீபத்தில் வலிமை படத்திலிருந்து 2- வது பாடல் வெளியிடப்பட்டது
இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது .