தலைவா கோஷத்துடன் ...! அண்ணாத்த படத்தை தியேட்டரில் ரசித்த ஷாலினி

மகனுடன் ‘அண்ணாத்த’ படத்தை தியேட்டரில் ரசித்துப் பார்த்த ஷாலினி . அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.;

Update: 2021-11-06 11:15 GMT
சென்னை

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம்  அண்ணாத்த.  சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்தது. 

உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில்  வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.  தமிழகத்தில் தீபாவளி அன்று அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்தது. 

படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலான திரையரங்குகளில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தை நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் கண்டுகளித்துள்ளார். 

நடிகை ஷாலின் தனது மகன் ஆத்விக் அஜித்துடன்  சத்யம் சினிமாவில் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்துள்ளார். ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், தியேட்டரிலிருந்து ஷாலினி ஆத்விக்குடன் வரும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் படம் எடுத்துக்கொண்டு அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் ஷாலினி, தலைவா என்று கத்தியபடி படம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்