நல்லா இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள் - நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய முதல்-அமைச்சர், மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக நடிகர் வடிவேலு கூறினார்.

Update: 2021-07-14 06:18 GMT
சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய பின் நடிகர் வடிவேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவரைப் போல என்னிடம் பேசினார். முதல்-அமைச்சரை நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளேன்.

அதிகமான படங்களில் இனி என்னைப் பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். திரைப்படங்களிலும் ஓடிடியிலும் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

நான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டேன். இன்னும் 40 தடுப்பூசிகள் போடச் சொன்னாலும் போட்டுக்கொள்வேன். அந்தளவுக்குப் பீதியாக உள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். உலகவே உற்றுபார்க்கும் வகையில் கொரோனாவை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கட்டுப்படுத்தி உள்ளார். கருணாநிதிக்கு பெயர் வாங்கிதரும் அளவுக்கு ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துவார்.

கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேட்கிறீர்கள். ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும்? நான் அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்