கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனா பாதிப்பில் பலி

கன்னட திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனா பாதிப்பில் பலியானார்.

Update: 2020-07-19 02:11 GMT
பெங்களூரு,

கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் (வயது 70).  இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள், 150க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது.

அவர், பிரேம லோகா என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் இருந்தபொழுது, 2வது நாளில் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன.  இதனை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

எனினும், அவருக்கு சுவாச கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.  அவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்