கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு: அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் - பாடகி எஸ்.ஜானகி

கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் என்று பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-05 08:02 GMT
சென்னை,

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவரை மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழுக்கி விழுந்ததில் எஸ்.ஜானகிக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  பின்னர் அவர் நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி,

கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன். வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நலம் பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்