திருப்பதி பிரம்மோற்சவ விழா: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்த தேவஸ்தானம்

தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அர்ச்சகர்கள் முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவை சந்தித்தனர்.

Update: 2024-09-22 11:45 GMT

திருப்பதி:

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் வேதபண்டிதர்கள் இன்று முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவை சந்தித்தனர். உண்டவல்லியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பிரம்மோற்சவ விழாவிற்கான அழைப்பிழை முதல்-மந்திரியிடம் வழங்கி, விழாவில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது, கோவில் பிரதான அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதர் மற்றும் வேத பண்டிதர்கள் முதல்-மந்திரிக்கு ஆசி வழங்கினர். பின்னர், அவருக்கு ஸ்ரீவாரி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்