குண்டடம்
குண்டடம் ஒன்றியம் இடையபட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற கருத்தாளர் ரவி நடத்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. விழாவில் அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ ராம்குமார் அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பேசினார். இடையபட்டி பள்ளியின் சார்பாகவும் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குண்டடம் கிளையின் சார்பாகவும் அறிவியல் ஆசிரியர் நடராஜன், ஆங்கில ஆசிரியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் இடையபட்டி பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதை இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் திவ்யா, கோமதி மற்றும் வர்ஷினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும் இந்நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.