பசுவந்தனை பகுதியில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் பகுதிள்

பசுவந்தனை பகுதியில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் பகுதிள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-09-13 14:57 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுவந்தனை உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் வண்டானம் மின் தொடருக்கு மேல் குறுக்காக புதிதாக 400 கி.வோ. இருவழி மின் தொடர் அமைக்கப்பட உள்ளது. எனவே, வண்டானம் மின் தொடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகின்ற தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், கே. குமாரபுரம், புதுப்பட்டி மற்றும்

பசுவந்தனை உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகின்ற ராயல் குளோரைடு மின் தொடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகின்ற உயரழுத்த மின் இணைப்பு மற்றும் பசுவந்தனை ஆகிய பகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்

மேலும், நாளை (வியாழக்கிழமை) விஜயாபுரி உபமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடரை முறையே 11 கி.வோ. கெச்சிலாபுரம் மின் தொடராகவும், 11 கி.வோ மந்திதோப்பு மின் தொடராகவும் பிரிக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள பணிகள் நடைபெற உள்ளதால், கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

--------

Tags:    

மேலும் செய்திகள்