கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகவாகனங்களில் கடத்த முயன்ற ரூ.9 லட்சம் குட்கா பறிமுதல்2 பேர் கைது

Update: 2023-04-21 19:00 GMT

கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக வாகனங்களில் கடத்த முயன்ற ரூ.9 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 2 பேரை கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சேலம் பைபாஸ் சாலை பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 778 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்வை இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 368 ஆகும். அவற்றையும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை கடத்தி வந்ததாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஓசூர்

ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் பெங்களூரு- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 149 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 ஆயிரத்து 600 ஆகும். அதையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை கடத்தி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கண்ணன்குடியை சேர்ந்த ஷேக் அப்துல்லா (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு குட்கா பொருட்கள் கடத்த இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்