சூர்யா -42 படத்தின் டைட்டில் எப்ப வருது..? ஞானவேல் ராஜா கொடுத்த அப்டேட்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

Update: 2023-03-21 16:35 GMT

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சூர்யா -42 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சூர்யா -42 படத்தின் டைட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டீசர் மே மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்