ஒரு இரவு என்னலாம் செய்யும்.. அதர்வா- மணிகண்டன் காம்போவில் ரெடியான மத்தகம்

இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’. இந்த தொடரில் அதர்வா, மணிகண்டன், கவுதமேனன் இணைந்து நடித்துள்ளனர்.

Update: 2023-07-23 18:04 GMT

இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'மத்தகம்' வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்