வரலட்சுமி சரத்குமாருடன் பிரபாஸ் உறவினர் மோதல்

‘அரசி’ படத்திற்காக வரலட்சுமி சரத்குமாருடன் பிரபாஸ் உறவினர் மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.;

Update:2022-07-08 15:38 IST
வரலட்சுமி சரத்குமாருடன் பிரபாஸ் உறவினர் மோதல்

ஒரு வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேருக்கும் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையக்கருவாக வைத்து, 'அரசி' என்ற படம் தயாராகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசின் உறவினர் கார்த்திக் ராஜூ ரவுடியாக நடிக்கிறார். இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. வக்கீலாக அங்கனாராய் நடிக்கிறார்.

மூன்று பேருக்கும் நடுவில் நடக்கும் போராட்டமே திரைக்கதை. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலை டைரக்டர் வெங்கட்பிரபுவும், அவருடைய தம்பி பிரேம்ஜியும் பாடி இருக்கிறார்கள். சூரியகிரண் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி எஸ்.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்