'லியோ' அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திரிஷா சொன்ன நச் பதில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-18 17:14 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் 'லியோ' அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு திரிஷா, "நீங்கள் எங்கே போனாலும் இந்த கேள்வி கேட்பதனால் சொல்கிறேன். 'லியோ' படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்க தளபதி விஜய் எல்லோரும் நல்லாயிருக்காங்க, மற்றவை 'லியோ' நிகழ்ச்சியில் பேசலாம்" என்று கூறினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்