மீண்டும் தனுஷுடன் இணையும் திரிஷா?
தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்த்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன்பு திரிஷா, தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.