மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல்.. மாமன்னன் படக்குழுவிற்கு சூரி வாழ்த்து

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Update: 2023-05-21 16:50 GMT

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்