ரஜினியுடன் விமானத்தில் உலாவரும் சூரரைப்போற்று நடிகை.. வைரலாகும் புகைப்படம்
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.;
மலையாள திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தார். 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த இவருக்கு அந்த படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வெளியான 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.