தனுஷ்-அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள "தாய் கிழவி" பாடல் இணையத்தில் வைரல்

அனிருத் இசையில் தனுஷ் குரலில் வெளியாகியுள்ள "தாய் கிழவி" பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2022-06-25 09:49 IST

சென்னை,

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில் தனுஷ் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான "தாய் கிழவி" பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமத்து பாணியில் உருவாகி இருக்கும் இப்பாடல் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்