வெளியானது விஜய் தேவரகொண்டா -சமந்தா படத்தின் முதல் பாடல்

நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-05-10 16:46 GMT

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதையடுத்து குஷி படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்