செஞ்சி கோட்டை புதையலைத் தேடி ஒரு பயணம் - 'செஞ்சி' திரைப்படம்
“வழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி, ஒரு சுவாரசியமான கதையைச் சொல்லும் படம்தான், செஞ்சி” என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர்-தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர்.
டைரக்டர் மேலும் கூறியதாவது:-
"பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு புதையல் இருக்கிற இடம் பற்றிய ரகசியத்தை அறியும் குறிப்புகள் இக்கால மனிதர்களுக்கு கிடைக்கிறது. அதைத் தேடி செல்கிற பயணத்தில் பல திடுக்கிடும் சுவாரசியமான சம்பவங்கள் நடக்கின்றன. அதுவே இந்தப் படத்தின் கதை.
செஞ்சிக்கோட்டை, புதுச்சேரி, கோவை, கேரள மாநிலம் கல்லார் ஆகிய இடங்களிலும், அடர்ந்த காடுகளிலும் படப்பிடிப்பு நடத்தினோம். திருவனந்தபுரத்தில் உள்ள கீதாஞ்சலி ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
மாஸ்கோவை சேர்ந்த மாடல் அழகி கெசன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 5 சிறுவர்களுடன் நானும் நடித்து இருக்கிறேன்."