தளபதி 68 - அடுத்த அப்டேட்.. வெளியான புது தகவல்!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.;

Update: 2023-08-24 16:47 GMT

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ படத்தின், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பது, பெரும் பொருட்செலவில் உருவாகி வருவது, விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என பல்வேறு காரணங்களால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு தளபதி 68 என்று அழைக்கப்படும் இந்த படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியன்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதவிர இந்த படத்தில் ஜோதிகா, மாதவன் மற்றும் பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தளபதி 68 படம் தொடர்பான அப்டேட்கள் லியோ படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்த போதும் தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்