இத்தனை கோடிகளா? முன்பதிவில் மாஸ் காட்டும் ஜவான்
ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஷாருக் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.;
ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய தகவல்களின் படி, ஜவான் படத்திற்கு முன்பதிவில் இருந்தே ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை நடைபெற்று இருக்கும் முன்பதிவு மற்றும் மென்பொருள் சிக்கல் என பல்வேறு காரணங்களால் முழு தொகையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாள் காட்சிக்கு நடைபெற்ற அதிகளவு முன்பதிவு என்ற சாதனையை ஜவான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.