விரைவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்தின் இரண்டாம் சிங்கிள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-05-31 18:25 GMT

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மாவீரன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் விடுப்பட்ட சில காட்சிகளை நேற்று படமாக்கப்பட்டதாகவும் இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அதீத உணர்வுகளை மையப்படுத்தி ஆக்ஷன் எண்டெர்டெயினர் உருவாகி வருவதாகவும் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்