அனிருத் மீது கடுப்பில் உள்ள பாடகர்கள்
அனிருத் மீது பின்னணி பாடகர்கள் பலரும் கடுப்பில் உள்ளார்களாம்.;
அனிருத், தான் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலான பாடல்களை அவரே பாடி விடுவதாகவும், இதன்மூலம் பல பாடகர்களின் வாய்ப்புகளை பறித்து விடுவதாகவும் வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. பின்னணி பாடகர்கள் பலரும் அவர் மீது கடுப்பில் உள்ளார் களாம். லியோ' படத்தில் கூட 2 பாடல்களை பாடியிருக்கிறார். `மற்ற இசையமைப்பாளர்களுக்காக பாடும்போது நான் பெரும்பாலும் சம்பளம் வாங்குவதில்லை. பணத்தை விட அனுபவத்தையே அதிகம் மதிக்கிறேன்' என்கிறார் அனிருத்.