இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி
தமிழ் திரையுலகின் பிரபல பாடகி சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து தற்போது சின்மயி தாயாகியுள்ளார்.;
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
2018-ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார் ராகுல் ரவீந்திரன். இவர் இயக்கிய மன்மதடு 2 என்ற படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.