முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் ராஜுடன் இணைந்த சித் ஸ்ரீராம்

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

Update: 2023-03-31 17:57 GMT

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 'ருத்ரன்' படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் நாளை (01.04.2023) வெளியாகவுள்ளது. இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் ஜிவி பிரகாஷுடன் சித் ஸ்ரீராம் முதல் முறையாக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்