புயலுக்கு முன்வரும் இடி அவள்.. வைரலாகும் நயன்தாரா போஸ்டர்

நடிகை நயன்தாரா தற்போது ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-07-18 16:59 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நயன்தாரா இருக்கும் இந்த போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், 'புயலுக்கு முன்வரும் இடி அவள்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்