ஷங்கர் படத்தின் பாடல் காட்சிகளுக்கு ரூ.90 கோடி செலவா?

இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-07 18:08 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் பாடல் காட்சிகளையும் மிகப்பிரமாண்டமாக இயக்குவார். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படத்திற்காக புதுமையான காட்சிகளை ஷங்கர் உருவாக்கியுள்ளதால் இத்தனை கோடிகள் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்