சத்யராஜுக்கு பிடிக்காத வேடம்
'சில படங்களில் பிடிக்காத கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். அதில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படமும் ஒன்று' என்று கூறி இருக்கிறார் சத்யராஜ்..;
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் குணசித்திர வேடங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார். தெலுங்கில் பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை இன்றளவும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர். அந்த படத்துக்கு பிறகு அனைத்து மொழிகளுக்குமான நடிகராக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை மலரும் நினைவுகளை சத்யராஜ் பகிர்ந்த போது பிடிக்காத கதாபாத்திரங்களில் நடித்ததை நினைவுபடுத்தினார். சத்யராஜ் கூறும்போது, "நான் சில படங்களில் பிடிக்காத கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். அதில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படமும் ஒன்று. அந்த படத்தில் தந்தை வேடத்தில் நடிக்க என்னை அணுகியபோது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால் ஷாருக்கான் மீது இருந்த அன்பு காரணமாக பிடிக்காத அந்த வேடத்தில் நடிக்க பின்னர் ஒப்புக் கொண்டேன்.
ஷாருக்கானை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால் அவர் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே லா ஜாயேங்கே' படத்தை அவருக்காகவே பல முறை பார்த்தேன் என்றார்.