இரு மொழி படத்தில் நடிக்கும் சமுத்திரகனி
தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.;
தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் இப்படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்க துர்கா பிரசாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.