மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் சாக்ஷி அகர்வால்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் மைக்கல் ஜாக்சன் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் மைக்கல் ஜாக்சன் ஸ்டைலில் உடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சாதாரண பெண் மட்டுமல்ல, தனித்துவம் தான் எனது வல்லமை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.