மீண்டும் வெளியாகும் ரெஜினா

இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'. இப்படம் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.;

Update: 2023-07-24 17:46 GMT

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 23-ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், 'ரெஜினா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்