கயல் ஆனந்தி கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்த இராவண கோட்டம் படக்குழு

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2023-05-11 17:46 GMT

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் கயல் ஆனந்தி இந்திராவாகவும், திபா ஷங்கர் காளியம்மாவாகவும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இதற்குமுன்பு சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்