'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினி நிறைவு செய்துள்ளார்.;
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தில் ரஜினி தனது பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.