கமல் தயாரிப்பில் ரஜினி.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

Update: 2022-06-21 17:04 GMT

விக்ரம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகையும் வியக்க வைத்திருக்கிறது. வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த ப்படத்தின் மூலம் எனக்கு பங்கு தொகை ரூ.75 கோடி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை இப்படி வெளியில் சொல்வதன் மூலம் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சொல்கிறேன் என்றார்.

சில வருடங்களுக்கு முன்பு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தபோது அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அலுவலகத்தை திறந்து வைத்து ரஜினி பேசியபோது, நல்ல கதை அமைந்தால் நான் கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிரியிருந்தார். அப்போது ரஜினி பேசிய விஷயம் பரபரப்பானது. இதை மனதில் வைத்து கமல்ஹாசன் சில பூர்வாங்கப் பணிகளை செய்தார்.

முதலில் ரஜினியும்-கமல்ஹாசனும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்தின் பட்ஜெட் யாரும் எதிர்பார்க்காதச் வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்பதே. அதற்கு செலவிட கமல்ஹாசனிடம் பணம் இல்லை என்பதால் கமல்ஹாசனே சில இடங்களில் சொல்லியிருக்கிறார். இதனால் அவருக்காக சில நண்பர்கள் பைனான்ஸ் திரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். அது அன்றைய சூழலுக்கு மேலும் நகராமல் அப்படியே நின்றுபோனது.

முதலில் கதை எழுதலாம் என்ற கமலின் யோசனையில் தோன்றியதே விக்ரம் படத்தின் முழு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கதை. இதற்கு அவர் முதலில் வைத்தப் பெயர் வேறு. லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்த போது அவர் சொன்ன கதையை கேட்டு விட்டு தன்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்று கமல்ஹாசன் சொல்ல, லோகேஷ் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டார்.

இந்தக் கதையில் ரஜினியையும் சேர்க்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது என்கிறார்கள். ஆனால் ஒரு முழுக்கதையில் ரஜினி-கமல் இருவருக்குமே சமபங்கு ஆக்‌ஷன் காட்சிகளும், பில்டப் காட்சிகளும் வைத்து எடுக்கபடுவது என்பது இன்றைய சூழலுக்கு நடக்காத காரியம். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சிக்கலான விஷயமாக இருந்தது. ஒருவர் ஹீரோவாக நடிக்க, இன்னொருவர் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும்.

அந்த வகையில் சூர்யா நடித்த பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். நிஜமாகவே தியேட்டர் அதிர்ந்துதான் போயிருக்கும். இதன் தொடர்ச்சியாக ரஜினியே அடுத்தப் படத்தில் முழுமையாக நார்கோடிக் ஆபிசராக நடித்தால் எப்படியிருக்கும் என்று கேட்கிறார்கள். ஆனால் இந்தத்திட்டம் ரஜினியின் பாலிசிக்கு ஒத்துவராது.

அவரைப்பொருத்தவரை எந்தப் படத்திற்கும் இரண்டாம் பாகம் நடிக்கக்கூடாது. தனது மொழிமாற்றுப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கக்கக்கூடாது என்பதே. இதனால்தான் அந்த இடத்தில் சூர்யா நடித்தார் என்கிறார்கள். ஆனால் இப்போதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற ரஜினியின் முடிவில் எந்தவித மாற்றம் இல்லை என்கிறார்கள்.

அதற்கு தகுந்த கதையும், காலச்சூழலும் அமைய வேண்டும். அதற்கான முயற்சியை கமல்ஹாசன் எடுப்பார் என்கிறார்கள். விக்ரம் படத்தின் நிகழ்ச்சிகளில் கூட நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறோம் கதைதான் அமைய வேண்டும் என்று பதிலளித்தார். இந்தக் கதையையும் கமல்ஹாசனே எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்