டோனி தயாரித்துள்ள எல்.ஜி.எம். படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
டோனி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.