திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மூன்றாம் கண்' திரைப்படத்தின் போஸ்டர்
இயக்குனர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.;
அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் கண்'. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் (Trending entertainment & White horse studios) சார்பில் கே. சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஸ் இசையமைக்க என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. 'மூன்றாம் கண்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று, காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.