பொன்னியின் செல்வன் வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.;

Update: 2023-04-05 17:54 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரின் மார்கெட் உயர்ந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 70 கோடி வரை ஜெயம் ரவி படத்திற்கு பிஸினஸ் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திலேயே ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் ஆகிய படங்கள் இந்த வருடமே திரைக்கு வரவுள்ளது. தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்