வசூலை குவித்து வரும் பொன்னியின் செல்வன் -2 திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-04-30 17:58 GMT

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாக வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்