பிச்சைக்காரன் -2 படத்தின் புதிய அப்டேட்
விஜய் ஆண்டனி தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’. இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.;
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.