இயக்குனர் மணிரத்னத்துக்கு ஐடியா கொடுத்த பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-04-06 17:48 GMT

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக பார்த்திபன் புதிய ஐடியா கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென… அவர் பதில்… என்று குறிப்பிட்டு மணிரத்னம் கொடுத்த பதிலையும் இணைத்துள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை சில இடங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்