இனி வீட்டிலேயே பார்க்கலாம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.. வெளியான ஓடிடி அறிவிப்பு..
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வருகிற ஜனவரி 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.