பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் புதிய அப்டேட்

நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-06-13 17:51 GMT

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்