தேசிய விருதுகள் வென்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோருக்கு தனுஷ் வாழ்த்து

சூரரைப்போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.;

Update: 2022-07-22 15:57 GMT

கோப்புப்படம் 

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐந்து பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் 'சூரரைப் போற்று' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தேசிய விருதுகளை குவித்த சூரரைப்போற்று படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷும் சிறந்த நடிகர் விருதை பெற்ற சூரியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில், "தேசிய விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சர் மற்றும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நாள்." என்று அவர் கூறியுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்