மீண்டும் வெளியாகும் நானியின் 'தசரா'.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

Update: 2023-04-21 16:46 GMT

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வெளிநாடு பாக்ஸ் ஆபிசில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படக்குழு 'தசரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்