இளையராஜாவை சந்தித்த "மியூசிக் ஸ்கூல்" பட இயக்குனர் பாப்பாராவ் மற்றும் ஸ்ரேயா சரண்

பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’. இப்படம் வருகிற மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-05-05 18:06 GMT

இயக்குனர் பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்துள்ளார்.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மியூசிக் ஸ்கூல் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இளையராஜாவை, இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் சந்தித்து அவருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்