'மார்கழி திங்கள்' படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ’மார்கழி திங்கள்’. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Update: 2023-05-25 16:50 GMT

1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

'மார்கழி திங்கள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்