அரசியல் தலைவர் கலந்து கொண்ட மாமனிதன் திரைப்படம்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். மாமனிதன் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.;

Update:2022-07-13 22:36 IST

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படம் விரைவில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'மாமனிதன்' படத்தின் சிறப்புக்காட்சியில் இடதுசாரி தலைவர்கள், தமிழக காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திரைத்துறையினர், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்