10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த "மாமன்னன்" டிரைலர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-06-20 16:41 GMT

'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் 'மாமன்னன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் யூடியூப்பில் முதலிடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்