விக்ரம் பிரபு படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ரெய்டு. இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.;
இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. டாணாக்காரனின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.
இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கும் படம் ரெய்டு.
இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.
ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.
இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.