மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கும் லிஜோமோல் ஜோஸ்

நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.;

Update:2023-10-22 22:21 IST

சமூகத்தில் பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இயக்குனர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ரோகிணி இயக்கும் இந்த படத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்